செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் பாயல் ராஜ்புத். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது 'கோல்மால், ஏஞ்சல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மங்களவாரம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா சேப்டர் 1' படத்திற்காக ஓபன் ஆக எக்ஸ் தளத்தில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். “காந்தாரா சேப்டர் 1' படத்திற்கு ஆடிஷன்கள் நடைபெற்று வருகிறது என கேள்விப்பட்டேன். இந்த மதிப்பிற்குரிய படத்தில் பங்கு பெற ஆர்வமாக உள்ளேன். சமீபத்தில் வெளியான 'மங்களவாரம்' படத்தில் எனது நடிப்புக்கு குறிப்பிடத்தக்க பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படத்தைப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தால் மகிழ்வேன். ஆடிஷன் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை மறுபதிவு செய்து இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல மொழிகளிலும் நடித்த ஒரு நடிகை இப்படி ஓபன் ஆக வாய்ப்பு கேட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.