''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு |
ஒரே ஆண்டில் இரண்டு 500 கோடி ஹிந்திப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய இயக்குனர்கள் இருவர் சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒருவர், 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, மற்றொருவர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா.
ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் இதுவரையிலும் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதனால், இன்னும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் தென்னிந்திய இயக்குனர்கள் மிகப் பெரும் வசூல் சாதனைகளைப் புரிந்தது கிடையாது. ஆனால், இப்போது நேரடி ஹிந்திப் படங்களை இயக்கி பெரிய வசூல் சாதனை செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.