பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் மோகன். மதுரையை சேர்ந்த இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சினிமாவை விட்டும் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இன்று(டிச, 9) காலை அவரது உயிர் பிரிந்தது.
40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரும் புகழை தந்தது ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‛முண்டாசுப்பட்டி' படம் தான். தொடர்ந்து ஏஆர்கே சரவண் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான ‛வீரன்' படத்திலும் நடித்து அசத்தினார். பெரும்பாலும் கிராமத்து கலந்த வேடங்களிலேயே நடித்தார். ரஜினி முருகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் காளி வெங்கட், ‛‛ஐயா நடிகர் மதுரை மோகன், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம் குமார், “வீரன்” பட இயக்குனர் ஏஆர்கே சரவண் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.