அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிரபல சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வந்த இருவரும் ஒருக்கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் தினேஷ் உருகி உருகி ரச்சிதாவிற்காக குரல் கொடுக்க, ரச்சிதாவோ தினேஷுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பேயில்லை என்றவாறு பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் தகவல் உலா வருகிறது. அதாவது நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தினேஷ் நாச்சியார்புரம் என்ற சீரியலை தயாரித்தார். இதற்காக அவர் பெரிய தொகையை கடனாகவும் வாங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாச்சியார்புரம் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடனில் சிக்கித் தவித்த தினேஷ் மீது வழக்குகள் பாய்ந்தது. அதில் தினேஷின் மனைவி ரச்சிதாவின் பெயரையும் இணைத்துவிட்டனர். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் தான் ரச்சிதா தினேஷுடன் சண்டைபோட்டு பிரிந்துள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களிலில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.