அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பிரபல நடிகரான அபிஷேக் சங்கர் சினிமா மற்றும் சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கோலங்கள் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது நிஜ வாழ்வின் நடந்த சுவாரசியமான காதல் கதை குறித்து கூறியுள்ளார்.
மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர் அன்றைய காலக்கட்டத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் தினக்கூலி வேலை பார்த்து வந்தாராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் இருந்த அவர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சம்பளம் வாங்கியவுடன் தேவி தியட்டேரில் படம் பார்த்துவிட்டு மீதமிருக்கும் 47 ரூபாய் மற்றும் சில்லரையை சேர்த்து வைத்துக் கொள்வாராம்.
அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண். அவர் மும்பையில் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசவே சேர்த்து வைத்திருந்த காசையெல்லாம் அபிஷேக் செலவு செய்துவிடுவாராம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே அவர் காத்திருப்பாராம்.