70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு |
கடந்த இரண்டு வருடங்களாகவே மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதுடன் ஐம்பது கோடிகளை தாண்டி வசூலித்து ஆச்சரியப்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் 2018, ஆர்டிஎக்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள பீனிக்ஸ் திரைப்படமும் வெளியான முதல் நாளே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹாரர் ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு பரதன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் நடித்திருப்பவர்களில் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் தவிர மற்றபடி அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்கள் தான். அதேசமயம் அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பதால் ரிலீஸுக்கு முன்பே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ஓரளவுக்கு இருந்தது.
அதை தக்க வைக்கும் விதமாக தற்போது படம் வெற்றியைப் பெற்றுள்ளது. படம் பார்த்த அனைவருமே பொதுவெளியிலும் சோசியல் மீடியாவிலும் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே கூறி வருகின்றனர் என்பதால் இந்த படமும் 50 கோடி வசூல் கிளப்பில் இன்னும் சில தினங்களில் இணையும் என எதிர்பார்க்கலாம்.