'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏஜிஎஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. அங்கு ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதை அடுத்து, இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.