அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் 'புலிக்குத்தி பாண்டி'. இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரகனி, சிங்கம் புலி, ஆர் கே சுரேஷ் மற்றும் வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு முத்தையா விருமன் படத்தை இயக்கினார். அவரது சகோதரி மகன் கார்த்தி இயக்கி உள்ள 'ரெய்டு' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார். இந்த படம் இன்று வெளிவந்துள்ளது. இதே நாளில் முத்தையா இயக்கிய 'புலிக்குத்தி பாண்டி' படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படம் கொரோனா காலம் என்பதால் முன்னணி தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.