ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
2024ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள படங்கள் என சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் 'லால் சலாம்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்', தமன்னா நடிக்கும் 'அரண்மனை 4', ஆகிய படங்கள் வெளியாவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இப்படத்தை டிசம்பர் 15 வெளியிடுவதாக இதற்கு முன் அறிவித்திருந்தார்கள். ஆனால், திடீரென இப்படி தள்ளி வைத்ததன் காரணம் தெரியவில்லை. பான் இந்தியா படமாக இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
டிசம்பர் 22ம் தேதி பிரபாஸ் நடிக்கும் 'சலார்', ஷாரூக்கான் நடிக்கும் 'டன்கி' ஆகிய படங்கள் வெளியாகவில்லை. 'கேப்டன் மில்லர்' படத்தை டிசம்பர் 15ல் வெளியிட்டால் ஒரு வாரத்தில் தியேட்டர்களை விட்டு தூக்க வேண்டிய நிலை வரலாம். தனுஷுக்கு தற்போது தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே, அப்படங்களுடன் போட்டியிட வேண்டாம் என்றுதான் பொங்கலுக்குத் தள்ளி வைத்திருப்பார்கள் என்கிறார்கள்.
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்திற்காக ரஜினிகாந்த்தை வைத்து படமாக்கிய காட்சிகளின் பிரதிகள் 'டெலிட்' ஆகிவிட்டதாக ஒரு பரபரப்பு எழுந்துள்ளது. அதனால், அந்தப் படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாம். எனவே தான் அந்த இடத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.