பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறார். அந்த வரிசையில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள "தங்கலான்" படத்தில் ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறி உள்ளார். படத்தின் டிரைலரில் இரண்டு விநாடியே இடம் பெற்ற அவரது தோற்றம் வைரலாக பரவி வருகிறது.
புகழ்பெற்ற ஹாலிவுட் படமான 'அபோகலிப்டோ'வின் நாயகி டாலியா ஹெர்ணான்டஸ் உடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மாளவிகாவை புகழ்கிறார்கள். அபோகலிப்டோ படத்தில் சக்தி வாய்ந்த மந்திரவாதியை எதிர்த்து போராடும் காட்டு வீரனின் மனைவியாக அவர் நடித்திருந்தார். ஒரு கிணற்றுக்குள் மறைந்திருந்து அவர் குழந்தையை பிரசவிக்கும் காட்சி உலக புகழ்பெற்றது.
தங்கலான் படத்தில் மாளவிகா ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் விக்ரமின் போராட்ட படையில் அவர் ஒரு தளபதியாக இருக்கிறார் என்றும், ஏற்கெனவே பார்வதியை திருமணம் செய்து கொண்டிருக்கும் அவரை மாளவிகா ஒரு தலையாக காதலிப்பதாகவும் பட வட்டாரத்தில் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.