மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் 'சேனாபதி' கதாபாத்திரம் மட்டுமே கமல்ஹாசனின் கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் அப்பா சேனாபதி (கமல்ஹாசன் 1) கதாபாத்திரம் தனது மகன் சந்துருவை (கமல்ஹாசன் 2) கொலை செய்வதுடன் படம் முடியும்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த 'இந்தியன் 2' இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அறிமுக வீடியோவின் முதலிலேயே எங்கோ ஒரு வெளிநாட்டில் இருக்கும் சேனாபதி, “எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன், இந்தியனுக்கு சாவே கிடையாது,” என வசனம் பேசுகிறார்.
'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாம் பாகம் 27 வருடங்கள் கழித்து வெளிவர உள்ளது. சேனாபதி கதாபாத்திரம் 1918ம் ஆண்டு பிறந்தவர் என காட்டப்பட்டது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்றவர். இப்போது 2023ம் வருடம், அப்படியென்றால் அவருடைய வயது 105 ஆண்டுகள். படத்தில் அத்தனை வயது கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா அல்லது வேறு ஒரு காரணம் எதையும் இக்கதாபாத்திரத்திற்காக இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.