‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது |
1996ல் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛இந்தியன்'. இதன் இரண்டாம் பாகம் இவர்கள் கூட்டணியில் தடைகள் பல கடந்து இப்போது உருவாகி உள்ளது. ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் அறிமுக வீடியோவை இன்று(நவ., 3) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். தமிழில் ரஜினி, தெலுங்கில் ராஜமவுலி, கன்னடத்தில் சுதீப், ஹிந்தியில் அமீர்கான், மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர்.
அதில், இந்தியன் முதல்பாக முடிவில், ‛‛எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பாக நான் வருவேன், இந்தியனுக்கு சாவே கிடையாது...'' என கமல் பேசியிருப்பார். அந்த வீடியோவை இப்போது அறிமுகமாக வெளியிட்டுள்ளனர். அதன்பின் வேலை, கான்ட்ரெக்ட்... என எல்லா இடங்களிலும் லஞ்சம் கேட்பது போன்றும், நாடு முழுக்க இது பரவி இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இதை எதிர்த்து சித்தார்த், பிரியா பவானி சங்கர் போன்றோர் குரல் கொடுப்பதும், போலீஸ் அடக்குமுறை போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் #ComebackIndian எனும் ஹேஷ்டாக் நாடு முழுக்க வைரலாகி இந்தியன் தாத்தாவை மீண்டும் அழைப்பது போன்றும் ஒரு பாடலாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். முடிவில் ‛‛வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்'' என கமல் நேதாஜி உடையில் வயதான தோற்றத்தில் திரும்ப வருவது போன்று முடித்துள்ளனர்.
முதல்பாகத்தில் பேசிய அதே லஞ்சம் விஷயத்தை தான் இந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படமாக்கி உள்ளனர் என வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. அதேசமயம் வீடியோ முடிவில் வெளியிடப்பட்ட ஒரு போட்டோவில் சுதந்திர காலத்து அல்லது அதற்கு முந்தைய ராணுவ வீரர்கள் போன்று ஒரு குரூப் போட்டோவை வெளியிட்டுள்ளனர். அதை பார்க்கும்போது இதில் சேனாபதி கமலின் இளமைக்கால விஷயங்களும் அடங்கி இருக்கலாம் என தெரிகிறது.