மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
தமிழ் சினிமாவில் கதை, ஹீரோக்களை கடந்து பல சமயங்களில் இசை தான் ஹீரோவாகவே மாறியுள்ளது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் போட்டி போட்டு ஹிட் பாடல்களை தருகின்றனர். என்னதான் போட்டி இருந்தாலும் அவ்வபோது ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளர் இசையில் பாடல்களை பாடுவது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடைபெறும்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளிவந்த 'ஜிகிர் தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற நவம்பர் 10ந் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்திலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக 'தீக்குச்சி' எனும் பாடலை பாடியுள்ளார். யுவனுடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இப்பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.