குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழில் 'நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்'' ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. ஐந்தே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சூர்யாவின் 43வது படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். நஸ்ரியாவின் மாமனார் பாசில் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் சில பல தரமான படங்களைத் தந்தவர்.
“பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் “பூவே பூச்சூடவா, பூ விழி வாசலிலே, வருஷம் 16, காதலுக்கு மரியாதை” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள். விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படம் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம்.
தமிழில் 2005ல் வெளிவந்த 'ஒரு நாள் ஒரு கனவு' படத்துடனும், மலையாளத்தில் 2011ல் வெளிவந்த 'லிவிங் டுகெதர்' படத்துடனும் இயக்குவதை நிறுத்திவிட்டார்.
நடிகை நஸ்ரியா மாமனார் பாசில், கணவர் பகத் பாசில் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாசில் உடல் இளைத்த தோற்றத்தில் இருக்கிறார். இருப்பினும் அவரது முகத்தில் இருக்கும் மலர்ச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அப்புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.