லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. முதல் பாகம் மட்டும் வெளியனா நிலையில் தற்போது விரைவில் இதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் நடிப்பை தாண்டி ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மற்றும் சாமி சாமி பாடலுக்கான நடனம் கூடவே சமந்தாவின் ஊ அண்டாவா என்கிற பாட்டு என இவையெல்லாம் சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும், வில்லனாக பன்வார் சிங் ஷெகாவத் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் நடித்திருந்த பஹத் பாசிலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
புஷ்பா படத்திற்கு பிறகு விக்ரம், மாமன்னன், வேட்டையன், ஆவேசம் ஆகிய படங்கள் மூலம் அவரது லெவல் எங்கேயோ போய்விட்டது. அதனால் தற்போது இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பஹத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா, புஷ்பா இரண்டாம் பாகத்தில் தனது கணவரின் பங்களிப்பு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “புஷ்பா முதல் பாகத்தில் பார்த்தது பஹத் பாசிலின் வெறும் அறிமுகம் மட்டும் தான். இந்த இரண்டாம் பாகத்தில் தான் உண்மையான பஹத் பாசில் யார் என பார்க்க போகிறீர்கள். இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக அளவில் காட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் புஷ்பா 2 நிச்சயமாக முழுக்க முழுக்க பஹத் பாசில் ஷோ ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார் நஸ்ரியா.