ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் தமன்னா நடனமாடிய 'காவாலா' பாடல் வெளியானதுமே 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆனது.
அதன் லிரிக் வீடியோ யு டியூப் தளத்தில் 215 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போது அப்பாடலின் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடல் வெளியான ஒரு மாதத்திற்குள் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
'ஜெயிலர்' படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் இந்த 'காவாலா' பாடலுக்கு முக்கிய இடமுண்டு. இப்பாடல் முழுக்க முழுக்க தமன்னாவின் கிளாமர் பாடலாக அமைந்தது. ரஜினி பாடலின் இடையில் ஓரிரு முறை மட்டுமே வந்து போவார்.




