சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் சொன்ன 'காக்கா, கழுகு' கதை மிகவும் பரபரப்பானது. யார் காக்கா ? யார் கழுகு, என ரசிகர்கள் அவரவராகவே சிலரைக் குறிப்பிட்டு அதை இன்னும் பரபரப்பாக்கினார்கள்.
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் அதற்கான பதிலை விஜய்யும் ஒரு கதை மூலம் சொல்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை நாளை மறுதினம் நவம்பர் 1ம் தேதி கொண்டாட உள்ளார்கள். அதற்குக் காவல் துறை அனுமதியும் கிடைத்துள்ளது.
'லியோ' படம் இதுவரை சில பல சர்ச்சைகளை சந்தித்தது. அது வசூல் விஷயம் வரையிலும் தொடர்ந்தது. அந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அடுத்த அரசியல் கட்ட நகர்வு குறித்தும் விஜய் மேடையில் பேசலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு சினிமா வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.
அல்லது இதற்கு மேலும் எந்த சர்ச்சையும் வேண்டாம் என படத்தைப் பற்றி மட்டும் விஜய் பேசுவாரா, அல்லது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் விதத்தில் பேசுவாரா என்பது அன்றிரவு தெரிந்துவிடும்.




