பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் அமலா பால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவரும், அவரது காதலருமான ஜெகத் தேசாய் இருவரும் கடந்த வாரம் அவர்களது காதலைப் பற்றி அறிவித்தனர்.
கடந்த வாரம் அமலா பால் பிறந்தநாளின் போது ஒரு வீடியோவை வெளியிட்டு அந்தக் காதலைச் சொன்னார் ஜெகத் தேசாய். அதே வீடியோவை அமலா பாலும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நேற்று அமலா பால் அந்த நிகழ்வின் புகைப்படங்களை நேற்று வெளியிட்டிருந்தார்.
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களுடன் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளம் புகைப்படமும் அதில் இடம் பெற்றிருந்தது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் கூட இப்படி முத்தக் காட்சி புகைப்படங்களைப் பகிர்வது சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது.
“ஒரு பார்ட்டியில் இது ஆரம்பமானது.. வாழ்நாள் முழுவதும் ஒன்றாகக் கொண்டாட….எங்களது காதல் கதை விரிகிறது,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.