ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்கியது | சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் |
நடிகர் ஜெயராம் மலையாளத்திலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். சமீப வருடங்களாக தெலுங்கிலும் தவிர்க்க முடியாத ஒரு குணசித்திர நடிகராக மாறிவிட்டார். இந்த நிலையில் முதன் முதலாக கன்னடத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் ஜெயராம். சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜெயராம். இந்த படத்திற்காக கன்னடத்தில் தானே டப்பிங்கும் பேசியுள்ளார்.
பான் இந்திய படமாக வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ஜெயராமிடம் அவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னத்தையும் நடிகர் பிரபுவையும் மிமிக்ரி செய்து கலகலப்பூட்டி நிகழ்ச்சியை நினைவுபடுத்திய செய்தியாளர் ஒருவர் அதேபோல இங்கேயும் செய்து காட்ட முடியுமா என்று கேட்டார்.
அதற்கு முதலில் யோசித்த ஜெயராம் பின்னர் பிரபுவை போலவே மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார். ஆனால் இந்தமுறை, “நாளை நான் சென்னை செல்ல போகிறேன்.. அங்கு என்னை பிரபு சார் பார்த்ததும், என்ன மும்பை போனாலும் என்னை மிமிக்ரி செய்து கிண்டல் பண்ணுகிறாயா ? உன்னை அடிக்கப் போகிறேன் என்று திட்டப் போகிறார்” என்பது போல பிரபுவின் குரலிலேயே மிமிக்கிரி செய்து அசத்தினார் ஜெயராம்.