அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

நடிகர் ரகுமான் திரையுலகில் நுழைந்து இன்னும் சில தினங்களில் 40 வருடங்களை தொடப் போகிறார். என்றும் மார்க்கண்டேயன் என்று இவரையும் சொல்லலாம் என்கிற விதமாக முப்பது வருடங்களுக்கு முன்பு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போலவே இன்னும் இளமை துடிப்புடன் பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ரகுமான்.
அந்த வகையில் தற்போது முதன் முதலாக பாலிவுட்டில் நுழைந்துள்ளதுடன் அமிதாப்பச்சனின் மகனாகவும் கண்பத் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்த படம் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் மார்சியல் ஆர்ட்ஸ் கோச் ஆக நடிக்கிறார்.
தமிழில் அவர் ‛நிறங்கள் மூன்று, அஞ்சாமை' ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களுடன் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களில் அதே சமயம் டபுள் ஆக்சன் ரோலாக இல்லாமல் ஒரே ஆளாக நடித்துள்ளார். நீட் தேர்வு விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு தனது காக்கி யூனிபார்ம் தடையாக இருக்கிறது என்பதால் அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வழக்கறிஞராக சட்டத்துடன் போராடும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகுமான்.