அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமின்றி ஹிந்தி வெப் சீரியல்களிலும் நடித்துள்ள சமந்தா, விஜயதேவர கொண்டாவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்தில் கமிட்டாகவில்லை. மேலும் குஷி படத்திற்கு பிறகு நடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த சமந்தா தற்போது மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடத்தில் ரசிகர் ஒருவர் உங்களைத் திருமணம் செய்தது போல ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடத்தில் அந்த புகைப்படத்தை காண்பித்து கேட்டபோது, அதை வாங்கி பார்க்க சமந்தா, நிறைய டைம் செலவு பண்ணி என்னுடைய போட்டோ உடன் அவரது புகைப்படத்தையும் இணைத்து இந்த டிசைன் செய்துள்ளார். அந்த ரசிகரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார் சமந்தா.