மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

அருண் வசீகரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், திரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து நேற்று முன்தினம் அக்டோபர் 6ம் தேதி வெளியான படம் 'த ரோட்'. இப்படத்திற்காக வெளியீட்டிற்கு முன்பாக எந்த ஒரு நிகழ்விலும், புரமோஷன் நிகழ்விலும் திரிஷா கலந்து கொள்ளவில்லை. படத்தின் டிரைலரை அவருடைய டுவிட்டர் தளத்தில் பகிர்ந்ததோடு நிறுத்திக் கொண்டார். அதன்பின் படம் வெளியாகும் வரை அதைப் பற்றி கண்டு கொள்ளவேயில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான படத்திற்கு விமர்சகர்களிடமிருந்து பாசிட்டிவ்வான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. ஒரு பரபரப்பான திரில்லராக படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். திரிஷாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது என ரசிகர்களும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அப்படியான வரவேற்பை எதிர்பார்க்காத திரிஷா கடந்த இரண்டு நாட்களாக படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர ஆரம்பித்துள்ளார்.
தற்போது 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டில் இருக்கும் திரிஷா அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் 'த ரோட்' படத்திற்கு ரசிகர்களும், விமர்சகர்களும் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் போது தன்னால் ஊரில் இருக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இதையே படம் வெளியாவதற்கு முன்பு செய்திருந்தால் அது படத்தின் ஓபனிங்கிற்கு பெரிதும் உதவியிருக்கும் என்று கோலிவுட்டில் கருத்து தெரிவிக்கிறார்கள்.