சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமுலா நடிகர் நிதின்-ஐ வைத்து புதிய பட ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். ‛‛இன்று இந்த படத்திற்கான பாடல் பணியில் இருக்கும்போது ஜி.வி.பிரகாஷ் கேப்டன் மில்லர் படத்திற்காக இசையமைத்த 'கில்லர் கில்லர்' எனும் பாடலை கேட்டேன் மைண்ட் ப்ளோயிங் என்பது சிறிய வார்த்தை மக்கள் இந்த பாடலை எப்படி வரவேற்பார்கள் என்பதை காண காத்திருக்கிறேன்'' என இவ்வாறு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.