சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு தற்போது அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்த படத்திலும் இணைந்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், எடிட்டர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
இந்த நிலையில் நேற்று முதல் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே அஜித் - த்ரிஷா இணைந்து நடிக்க கூடிய ரொமான்ஸ் காட்சிகளை தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களுக்கு இது போன்ற காட்சிகளை படமாக்கிவிட்டு, அதன் பிறகு வில்லன்களுடன் அஜித் மோதும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாகவே முன்கூட்டியே ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், அஜர்பைஜானுக்கு சென்று முகாமிட்டு அதற்கான ரிகர்சல் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். மூன்று வாரங்கள் அங்கு ரொமான்ஸ் மற்றும் பைட் சீன்களை படமாக்கி விட்டு அதன் பிறகு விடாமுயற்சி படக் குழு சென்னை திரும்புகிறது.