தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக் ஷன் படம் ‛லியோ'. அக்., 19ல் படம் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீடு நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விழா ரத்தானது.
இந்நிலையில் இன்று(அக்.,5) மாலை 6:30 மணியளவில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது என டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. 2:43 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் பார்த்தி எனும் விஜய், மனைவி திரிஷா மற்றும் மகளுடன் காஷ்மீரில் வசிக்கிறார். அவரை கொல்ல சஞ்சய் தத், அர்ஜூன் கூட்டம் துரத்துகிறது. எதற்காக இவர்கள் துரத்துகிறார்கள் என்பது படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
டிரைலரில் ஒரு காட்சியில் விஜய், ‛‛எவனோ ஒரு இந்த பையன்(கெட்டவார்த்தை) என்னை மாதிரி இருக்கான் என்பதற்காக ஆளாளுக்கு என்ன போட்டு உயிர எடுத்தா நான் என்னடி பண்ணுவேன்...'' என த்ரிஷாவிடம் கோபமாக பேசுகிறார். இதை வைத்து பார்க்கையில் படத்தில் லியோ, பார்த்தி என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பார் என தெரிகிறது. அல்லது ஒரு விஜய்யே இரண்டு விதமான கதாபாத்திரங்களிலோ இல்லை அண்டர் காப் போலீசாக தோன்றலாம் என தெரிகிறது. இருப்பினும் படம் வெளியான பின்பே இது முழுமையாக தெரிய வரும்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ‛லியோ' டிரைலர் இருப்பதால் அதனை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என இரு முகங்களை காட்டி உள்ளார் விஜய். அதோடு டிரைலரில் விஜய் மட்டுமல்லாது திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், மன்சூரலிகான், மிஷ்கின் உள்ளிட்டோரும் ஓரிரு காட்சிகளில் இடம் பெறுவது போன்று கட் செய்துள்ளனர். டிரைலர் வெளியான 5 நிமிடத்திலேயே 10 லட்சம் பார்வைகளை கடந்த இந்த டிரைலர் வைலாகி டிரெண்ட் ஆனது.
தியேட்டர்களில் டிரைலர் வெளியீடு
லியோ படத்தின் டிரைலரை பொது வெளியில் திரையிட அனுமதி கோரி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் போலீஸிடம் அனுமதி கோரியது. முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தியேட்டருக்குள் திரையிட அனுமதி வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் மாலை முதல் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தியேட்டரில் டிரைலர் வெளியிட்டபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர்.
டிரைலரில் கெட்டவார்த்தை
சமீபகாலமாக படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை இடம் பெறுவது அதிகமாகி வருகிறது. லியோ டிரைலரிலும் 1:47 நிமிடத்தில் விஜய் ஒரு கெட்ட வார்த்தை பேசி உள்ளார். இது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் லியோ படம் அக்., 19ல் வெளியாகிறது.