ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் வருகிற 19ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட அப்படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் ரத்தவாடை இருந்து வந்தது. குறிப்பாக, விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் போஸ்டர்களில் ரத்தம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று த்ரிஷாவின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவரும் ரத்தம் தெறிக்கும் வகையில் காணப்படுகிறார். இப்படி இதுவரை விஜய் மற்றும் வில்லன் நடிகர்களின் போஸ்டரில் ரத்தம் வழியும் காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில், இப்போது த்ரிஷாவின் போஸ்டரிலும் அதே ரத்தம் தெறிப்பதால், மாறுபட்ட ரோலில் அவர் நடித்திருப்பாரோ என்கிற யூகங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.