வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி |
நடிகை சமந்தாவை பொறுத்தவரை தனது படங்களின் வெற்றி தோல்வி பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. படம் ரிலீஸ் ஆகும் வரை தனது முழு பங்களிப்பையும் கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் நினைத்தபடி அடுத்த பட வேலைகளுக்கோ அல்லது சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவார். அப்படி சமீபத்தில் தான் நடித்த குஷி திரைப்படம் வெளியாகி இங்கே வரவேற்பு பெற்ற சமயத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா.
இந்த நிலையில் தற்போது இத்தாலியில் முகாமிட்டு சுதந்திரமாக சுற்றி தெரிந்து வருகிறார் சமந்தா. அப்படி வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் அங்குள்ள மக்களுடன் வரிசையில் நின்று ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார் சமந்தா. அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள சமந்தா, ‛காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் தானாகவே தேடி வரும்' என்று கூறியுள்ளார்.