வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
ஆச்சார்யா படத்தின் தோல்விக்குப் பிறகு கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவாரா'. இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.
தற்போது விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, ‛‛தேவாரா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் ஏப்ரல் 5 2024 அன்று வெளியாகிறது. இது மறந்துப்போன கடற்பகுதி குறித்து பேசும் திரைப்படம். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அழுத்தமாக இருக்கும். அதனால் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறோம்'' என வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.