'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் இயக்குனர்களில் ஒருவர் ஜெயதேவி. நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் ஜெயதேவி. இதய மலர், சாய்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்பட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு மற்றவை நேரில் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தொடர்ந்து நலம் நலமறிய ஆவல், விலாங்குமீன், விலங்கு, பாசம் ஒரு வேசம், புரட்சிக்காரன், பவர் ஆப் உமன் படங்களை இயக்கினார். குஷ்பு, மற்றும் பாடகர் ஹரிகரன் நடித்த 'பவர் ஆப் உமன் படம்' சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பெற்றது. சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
65 வயதான ஜெயதேவி காரம்பாக்கத்தில் உள்ள சமயபுரம் நகரில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக இதய பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்தார் ஜெயதேவி. இவருக்கு குழந்தைகள் இல்லை. தனது அண்ணன் மகன் முத்துகுமாரை வளர்த்து வந்தார். கடைசியாக குஷ்பு, சுஹாசினி நடிப்பில் 'ஆனந்த லீலை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வந்தார். அந்த படம் வெளிவரவில்லை.