ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா இந்த படத்தை இயக்குகிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் நடிக்கிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவருக்கு கிடைத்த ஒரு 3 வயது குழந்தைக்குமான அன்பை சொல்லும் படமாக உருவாகிறது.




