'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களை தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர். சி. இதில சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி.கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவும் பேய் படம் என்றாலும் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அதன் உடன் இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தயாரிக்கிறார்.