ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மற்றும் புரமோசன்கள் நடைபெற்று வரும் நிலையில், இசை விழா வருகிற 30-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு ஆளும் கட்சி தரப்பு மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், லியோ படத்தின் இசை விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திமுக அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை தங்களுக்கு கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தரப்பு தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அந்த செய்தியை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையில்லை. முற்றிலும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.