தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் அஞ்சலி. 2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். இருப்பினும் தமிழில் அடிக்கடி இடைவெளிவிட்டு நடித்ததால் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் போய்விட்டார்.
தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 50வது படமான 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.
அது குறித்து, “கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி” படத்தின் மூலம் எனது 50வது படத்தின் படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில் ஒரு அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக எனது ஏற்றத் தாழ்வுகளில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.




