கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, ‛என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
திடீரென மகள் இறந்ததால் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புது இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.