இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் |
துணை நடிகை, மாடலிங், டப்பிங் ஆர்டிஸ்ட், சமையல் வித்தகர், வனவிலங்கு, இயற்கை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்டவர் பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனே.
கொஞ்சும் தமிழில் அவர் அளித்த பேட்டி: நான் பிறந்தது பிரான்ஸ். 6 வயதில் புதுச்சேரியில் குடியேறிவிட்டோம். வீட்டிற்கு ஒரே செல்ல பெண். பி.எஸ்சி., நர்சிங் (கால்நடை பராமரிப்பு) பிரான்சில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே காஸ்டியூம் போட்டு, விழாக்களில் நடித்துள்ளேன். இந்த பயிற்சியே நடிப்பிற்குள் என்னை இழுத்தது. திரைப்படங்கள் மீதான பற்றால் தமிழை ஆர்வமுடன் கற்றேன். தமிழ் எழுத, படிக்க தெரியும். விளம்பர படங்களில் அதிகம் நடித்துள்ளேன். மாடலிங்கில் ஆர்வம் இருப்பதால், அதிக மேடைகளில் 'ரேம்ப் வாக்' செய்து பாராட்டு பெற்றுள்ளேன்.
நண்பர் மூலம் தனியார் டி.வி., சமையல் போட்டிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி மூலம் சிறந்த சமையல் வித்தகரானேன். சமையல், சாப்பாடு தான் விருப்பம். இந்நிகழ்ச்சி முழுவதும் ஜாலியாக அமைந்திருந்தது. ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி பட பாடலில் டான்சராக அறிமுகமானேன். ரஜினியுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், 'படையப்பா நீலாம்பரி' கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்குள் ஒருவன், ஜீரோ, ரம், வீரசிவாஜி, கண்டேன் காதல் கொண்டேன் படங்களில் நடித்துள்ளேன்.
மேல்நாட்டு மருமகன் படத்தில் ராஜ்கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். 'ரஜினிமுருகன்' படத்தில் முக்கிய ரோல் கிடைத்தது. அதில் சிவகார்த்திகேயன் என்னிடம் காதலை சொல்லும் போது, அவர் என்னை இங்கிலீஷ் புறா, ஜீன்ஸ்போட்ட ஜிகர்தண்டா என வர்ணிப்பார். அப்போது நான் குறுக்கிட்டு நான் உங்களை காதலிக்கவில்லை என்பேன். அவர் உடனே ஏன் ஆஸ்திரேலியா, அமெரிக்காகாரனை காதலிக்கிறாய் என்பார். நான் கருப்பு என்பதால் பிடிக்கவில்லையா எனவும் கேட்பார். நான் உடனே எனக்கு கருப்பு ஒரு பிரச்னை இல்லை. நான் 'மதுரைகாரனை ...' காதலிக்கிறேன் என சூரியை குறிப்பிடுவேன். அந்த நடிப்பு எனக்கு 'ஹைலைட்' ஆக மாறியது.
நடிக்கும் அனைத்து படத்திலும் நானே 'டப்பிங்' கொடுப்பேன். இது வரை 10க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளேன். அசாமி மொழியிலும் நடிக்கிறேன். அந்த படம் எனக்கு திருப்பு முனையாக அமையும். புதுச்சேரி ஆரோவில்லில் தற்போது வசிக்கிறேன். அங்குள்ள தரிசு நிலங்களில் பாரம்பரிய மரக்கன்று நட்டு பராமரித்து வருகிறேன். வனவிலங்கு 'போட்டோ ஷூட்' கலைஞராகவும் வளர்ந்துள்ளேன். தமிழ் மக்கள் அவர்களின் வீட்டில் ஒரு பெண் போல் என்னை பார்க்கின்றனர். இதனாலேயே தமிழையும், தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறேன் என்றார்.