'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு |

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் தெலுங்கு, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்குகிறார்.
இந்த படத்தில் செல்வராகவனுடன் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தி, சுனில் ஆகியோரும், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர யோகி பாபு, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும்” என்றார்.




