‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தில் இரண்டு காட்சிகளுக்கு கட் செய்து 'ஏ' சான்றிதழ் அளித்தனர். இதில் நிறைய ரத்தம் தெறிக்கும் மற்றும் ஆக்ரோஷமான காட்சிகள் உள்ளனவாம். மேலும், இந்த படத்தின் நீளம் 2 மணி நேர 33 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதிபகவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த படங்களில் இறைவன் படத்திற்கு தான் 'ஏ' சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.