திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக படைப்பாளியாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், மீரா, லாரா என்ற இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் மீரா(16), சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்க சென்ற மீரா, நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் இந்த தற்கொலை சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டாகவே மன அழுத்த பிரச்னையால் மீரா அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மீராவின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின் விஜய் ஆண்டனியின் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீராவின் உடலுக்கு விஜய் அம்மா ஷோபா சந்திர சேகர், குஷ்பு, சதீஷ், எடிட்டர் மோகன், மோகன் ராஜா, அமைச்சர் உதயநிதி, இசையமைப்பாளர் யுவன், பாரதிராஜா, சாட்னா டைட்டஸ், அலிஷா அப்துல்லா, ரித்திகா சிங், மன்சூரலிகான், நடிகை சுதா, லலித், டி சிவா, தனஞ்செயன், மிஷ்கின், சந்தானம், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி, ஞானவேல்ராஜா, கிருத்திகா உதயநிதி, சிம்பு, பார்த்திபன், ராகவா லாரன்ஸ், பாடகர் கிரிஷ், தேவிஸ்ரீ பிரசாத், ராதிகா, அருண் விஜய், சத்யராஜ், சிபிராஜ், சித்தார்த், சுசீந்திரன், ஹரிஷ் கல்யாண், பிரபுதேவா, ஆர்த்தி, கணேஷ், பிக்பாஸ் ஜூலி, சின்மயி, கானா பாலா, லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் தருண், பிக்பாஸ் ஏடிகே, விக்ரமன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் மீரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் ஆண்டனி அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினர். பல திரைப்பிரபலங்கள் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று(செப்., 20) காலை மீராவின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் பிரார்த்தனை மற்றும் பிற சடங்குகள் செய்யப்பட்ட பின் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.