25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தான் நடித்த காலத்தில் மூன்று மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருந்து இந்தியாவின் கனவுக்கன்னி என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பிரபல தயாரிப்பாளர் போனிகபூரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள்.
ஜான்வி கபூர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து வருகிறார். குஷி கபூர் ஹிந்தியில் ஓடிடியில் வெளியாக உள்ள 'த ஆர்ச்சிஸ்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் குஷி கபூர் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனின் உதவியாளர் ஆகாஷ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க குஷி சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முற்றிலும் அமெரிக்காவில் படமாக உள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதாம்.
இதற்கு முன்பு ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார் என்ற செய்திகள் வந்த போது அது தவறான செய்தி என்று மறுத்தார் போனி கபூர். தற்போது குஷி கபூர் பற்றி வந்துள்ள செய்திக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என காத்திருக்கிறார்கள்.