எளிமையாக நடைபெற்ற 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி திருமணம்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் | ஏழு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் அறிவிப்பு: ஆச்சரியப்படுத்திய 'தக் லைப்' | கனவுகள் உயிர்பெறுவதை பார்ப்பேன்: கமலுக்கு ஸ்ருதி நெகிழ்ச்சி வாழ்த்து | 'கங்குவா' வெளியீட்டுக்கு எதிரான வழக்கு, நாளை முடிவு தெரியும்? | 'கூலி, குட் பேட் அக்லி' - எப்போது ரிலீஸ் தெரியுமா? | பிளாஷ்பேக்: ரஜினிக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த கமல் | சிறப்பு பார்வை: 'கமலிசம்' சினிமாவில் வெற்றி, அரசியலில் தோல்வி | பிளாஷ்பேக்: ரஜினி படம் வெளிவர உதவிய கமல்ஹாசன் | விஜய் 69வது படத்தின் தமிழக உரிமையை வாங்கும் லியோ தயாரிப்பாளர் லலித் குமார் | அரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா? -ரஜினியின் அண்ணன் ஏற்படுத்திய பரபரப்பு |
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்குனராக களமிறங்கி உள்ள படம் 'மார்கழி திங்கள்'. பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைத்துள்ளார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்துள்ள படம் இதுவாகும். இயக்குனர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மனோஜ் பாரதிராஜா : ‛‛18 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக வந்திருக்கிறேன். சுசீந்திரனிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு 'நீங்க படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்'' என நெகிழ்ச்சி உடன் பேசினார்.