ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஒரு டைம் டிராவல் படம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தில் ஹாலிவுட் ரேன்ஞ்சிற்கு அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பார்வையிடவும், விஜய்யை 3டி தொழில் நுட்பத்தில் மோசன் கேப்ச்சர் முறையில் படங்கள் எடுக்கவும் படக்குழுவினர் அமெரிக்கா சென்றார்கள். இதனை அங்குள்ள ஸ்டூடியோவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த பணிகளை முடித்து விட்டு ஏற்கெனவே வெங்கட்பிரவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் திரும்பிவிட்ட நிலையில் பணிகளுக்கு பிறகும் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்த விஜய் நேற்று சென்னை திரும்பினார். இங்கு தற்போது அவர் 'லியோ' படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபடுவார் என்றும், நவம்பர் மாதத்தில் இருந்து வெங்கட்பிரபுவின் படத்தில் பணியாற்றுவார் என்றும் தெரிகிறது.