பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் தொகுத்து வழங்கவுள்ளார். இதைத் தொடர்ந்து கமலின் 233வது படத்தை வினோத் இயக்குகிறார். இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்தனர்.
இந்த படத்திற்காக துப்பாக்கி சூடு பயிற்சியில் சமீபகாலமாக கமல் ஈடுபட்டு வருகிறார். இது விவசாயம் சம்மந்தப்பட்ட படம் என்று முன்பு கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இது ராணுவ பின்னனியில் நடக்கும் கதைக்களம் என்கிறார்கள். இதில் ராணுவ வீரராக கமல் நடிப்பதாகவும், இதற்கான பயிற்சிகளை கமல் இப்போது மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.