பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

‛‛சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள், ஓ மை கடவுளே'' போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் அசோக் செல்வன். சமீபத்தில் இவர் நடித்த 'போர் தொழில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன், ‛தும்பா, அன்பிற்கினியாள்' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில இவர்களின் திருமணம் இன்று (செப்.,13) திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் சேது அம்மாள் பண்ணையில் நடந்தது. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என கூறப்படுகிறது. புதுமண தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.