2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
நடிகை அனுஷ்கா நடிப்பில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியாகி உள்ள படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. கதாநாயகனாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ்பாபு என்பவர் இயக்கியுள்ளார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணின் முயற்சியும் ஆண்துணை வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை அவர் இறுதியில் எப்படி உணர்ந்து கொள்கிறார் என்பதையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. ரசிகர்களிடமும் ஓரளவுக்கு இந்த படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தநிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பெண்களுக்காக சிறப்பு காலைக் காட்சி ஒன்று செப்டம்பர் 14ஆம் தேதி (நாளை) திரையிட ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. இந்த படத்தை பெண்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 20 தியேட்டர்களில் இந்த படத்தின் காலை சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது என்கிற பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.