பிளாஷ்பேக் : வெளியீட்டுக்குப் பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம். | 'எமர்ஜென்சி' படத்தால் நிதி நெருக்கடி : மும்பை பங்களாவை 32 கோடிக்கு விற்றார் கங்கனா | தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர் | கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை | உதயநிதிக்கு பதில் அளிக்க 'ஏஞ்சல்' பட தயாரிப்பாளருக்கு கோர்ட் உத்தரவு | பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு தாய் பற்றி பேசிய படம் | கல்லுரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை வருமா? | சிறிய விபத்தில் சிக்கி, ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா | வேட்டையன் - 'மனசிலாயோ' பாடல் வெளியானது | 10 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவுகள்… - அதிர்ச்சியடையும் ரசிகர்கள் |
சென்னனை : இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் அதனை பார்க்க முடியாமல் போன பார்வையாளர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணி துவங்கி உள்ளது.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த ஞாயிறு(செப்., 10) அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ஆனால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு ஒரு வலியை தந்த இசை நிகழ்ச்சியாக மாறி போனது. அந்தளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறிவிட்டன. ரூ.5000, ரூ.10,000, ரூ.25,000 என டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுபற்றிய புகார்களை ரசிகர்கள் கோபத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த ரஹ்மான், ‛‛என்னை சிலர் ஆடு என்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலியாடு ஆகிறேன். நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியை அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்'' என சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
அதேசமயம் நடந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம் பொறுப்பேற்றதுடன் மன்னிப்பு கேட்டது. திரையுலகினர் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கி, அதை பார்க்க முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணி துவங்கி உள்ளது. நேற்றிரவு முதல் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரஹ்மான் குழுவிற்கு 4000 மெயில்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து முதற்கட்டமாக 400 பேருக்கு பணத்தை திருப்பி தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.