7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி படமாக மாறியது.
சமீபத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதிலும் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்த பாகத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பஹத் பாசில் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.