ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவுதமி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கவுதமி பின்னர் அதிலிருந்து மீண்டு, தற்போது தொலைக்காட்சி தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார் கவுதமி. அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமா தொழிலில் 17 வயது முதல் சம்பாதித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு 25 கோடி ஆகும்.
எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத் தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
இந்த நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.