கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு |
ரஜினி- பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை கவுதமி. அதன் பிறகு தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர், அவருடன் இணைந்து பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த கவுதமி தற்போது சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற தொடரில் கவுதமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.