சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | மறு தணிக்கைக்கு செல்கிறது 'பரமசிவன் பாத்திமா' | ஒரே படத்தோடு நடிப்புக்கு குட்பை சொன்னது ஏன்? - விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா | இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர் | வெள்ளிக்கிழமை மார்ச் 21ல் வெளியான படங்களின் ரிசல்ட் என்ன? | கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி |
'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கி உள்ள படம் 'மஹாராஜா'. இது விஜய் சேதுபதியின் 50வது படம். அவருடன் அனுராக் காஷ்யப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது:
என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்துக்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கு நன்றி. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்.
அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. அனுராக்கின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.