நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி ரோட்'. சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை எ.எ.எ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படம் முழுவதும் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு , அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது என வீடியோ மூலமாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை செப்டம்பர் மூன்றாவது வாரம் திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.




